வேஸ்ட்லெஸ்
வேஸ்ட்லெஸ் - கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் அதன் நிலைத்தன்மை பற்றிய கல்வி உபகரணங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறது. ஆழ்ந்த பரிசோதனை மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்தியாவின் இளம்வயதினருக்காக புதுமையான மற்றும் சக்திவாய்ந்த கற்றல் அனுபவங்களை உருவாக்க உதவுகிறது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான இடைவெளியை குறைத்து, அதன் மூலம் அணுகுமுறை மற்றும் நடத்தையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
ராம்கோ சி,எஸ்,ஆர் ஆதரவுடன், சுமார் 2 லட்சம் மாணவர்களை சென்றடையும் வகையில் கழிவுப்பொருள் அறிவியல், பிக் இட் அப் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய கல்வித்திட்டங்களை உருவாக்கி வருகிறது.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விரிவான புள்ளிவிவரங்கள் மற்றும் சிறந்த களப்பயிற்சிகளின் அடிப்படையில், இந்த முக்கிய கல்வி அம்சங்கள் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்களை சென்றடையும் வகையில் தமிழக பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டது.
குழந்தைகள் சக்தி வாய்ந்த மாற்றங்களை உருவாக்குபவர்கள் மறறும் இந்தத் திட்டங்களின் வாயிலாக அவர்கள் அதிகாரம் பெற்று, பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு அறிவைப் பரப்புவதற்கு உந்துதல் பெறுகின்றனர். அவர்கள் வீட்டிலேயே கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், SS தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்துதல், பிறந்தநாள் உபசரிப்புகளுக்கு பொதியிடப்படாத இனிப்புகளைப் பகிர்தல் மற்றும் உள்ளுர் குப்பைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தல் போன்ற நிலையான நடத்தையை கையாள தொடங்குகிறார்கள்.
வேஸ்ட்லெஸ் குழு
"குழந்தைகள் சக்திவாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டு அவர்களுக்கான கல்வியை வழங்கினாலே போதுமானது.."