தாமரை கல்வி திட்டங்கள்
தாமரை கல்வித் திட்டங்கள் மனித ஒற்றுமையை நம்புகின்றன. ஆரோவில்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் தலைமைத்துவத் திட்டங்களை வழங்குவதில் தாமரை கல்வித் திட்டங்கள் பணியாற்றுகின்றன, இதன் மூலம் அவர்களின் சமூகம் மற்றும் பரந்த உலகத்தின் நல்வாழ்வுக்காக அவர்கள் தங்கள் முழுத் ஆற்றலுடன் பாடுபடுபவர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க முடியும்.
2006 ஆம் ஆண்டு முதல், தாமரை கல்வித் திட்டங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு அடுத்து அமைந்துள்ள ஓதுக்கப்பட்ட கிராமங்களில் கல்விச் சேவைகளை வழங்குகின்றன. அவர்களின் தற்போதைய திட்டங்கள் இந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 90 குழந்தைகளுக்கு பள்ளிக்குப்பின் திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கின்றன. கூடுதலாக, பெரியவர்களின் உணர்வுபூர்வமான வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் உள்ளூர் பள்ளிகள் மற்றும் தொழில் நிலையங்கள்/கிராம மையங்களில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
சவால்
தாமரை, பல ஆண்டுகளாக, மோசமான கல்வியறிவு திறன், குறைந்த வருமானம் மற்றும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ள மது அடிமைத்தனம், அதனால் ஏற்படும் பிரச்சனைகளான கடன், துஷ்பிரயோகம் மற்றும் நிதி பற்றாக்குறையால் குழந்தைகள் கல்வியை இடைநிறுத்துதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேலை செய்து வருகிறது. ஆங்கிலம் கற்கும்-மொழியாக இருப்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வியில் உதவிபுரிய முடியவில்லை.
தீர்வு
கல்வி வளங்கள் மற்றும் வாய்ப்புகளை அனுகுதல் வாழ்க்கையை மாற்றுகிறது, பள்ளிக்குப் பிந்தைய திட்டம் குழந்தைகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. இத்திட்டம் கல்விஉதவியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆங்கில வகுப்புகள், டிஜிட்டல் கல்வியறிவு, தலைமைத்துவம், கலை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் வீட்டுப்பாட செய்ய உதவி ஆகியவற்றை உள்ளடக்கியது.
நீண்டகால தாக்கம்
தாமரையின் திட்டங்கள் கடந்த 13 ஆண்டுகளாக கிராமங்களில் இயங்கி வருகின்றன. ஒரு காலத்தில் பள்ளிக்குப்பின் திட்டங்களில் கலந்து கொண்ட குழந்தைகள், இப்போது கல்லூரி பட்டதாரிகளாகவும், உதவியாளர்களாகவும் உள்ளனர், அவர்களில் பலர் தற்போதைய தாமரை நிகழ்ச்சிகளை வழிநடத்தி வருகிறார்கள். கிராமங்களின் நிலைமைகளை மேம்படுத்த, கிராம மக்களுக்கு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, மது அருந்துவதைக் குறைத்தல், சமூக மேம்பாடு மற்றும் கல்வியில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டங்களை தொடர்ந்து வருகிறது மற்றும் அவர்களே தங்களை மாற்றத்தின் முகவர்களாக நினைக்கும் வகையில் செய்கிறது,