ஸ்ரீ ராம் தொடக்கப்பள்ளி
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : கல்வி
திட்டத்தின் தொடக்கம் : 1962
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
புகைப்படத் தொகுப்பு
திட்டம்
ஸ்ரீராம் தொடக்கப் பள்ளி, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளைக் கொண்ட அரசு உதவி பெறும் இருபாலர் பள்ளியாகும். இந்த பள்ளியானது 1-8-1962 அன்று குருபக்தமணி ஸ்ரீதர்மரக்ஷகர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிமணிய ராஜா (ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன்) அவர்களால் நிறுவப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த மூன்று மாத முறை மற்றும் CCE (தொடர்ச்சியான விரிவான மதிப்பீடு) முறை பள்ளியில் பின்பற்றப்படுகிறது. பள்ளியின் தலைமையாசிரியை திருமதி எஸ். விஜயலக்ஷ்மி. தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட். ராமசாமி ராஜா நகர் ஆலை தலைவர் பள்ளியின் செயலாளராக உள்ளார். தற்சமயம் செயலாளராக சிமென்ட் தொழிற்சாலையின் தலைவர் திரு.எஸ்.ராமலிங்கம் உள்ளார்.
பி.ஏ.சி. ராமசாமி ராஜா கல்வி அறக்கட்டளையின் கீழ் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி 23 மாணவர்களுடனும் ஒரு ஆசிரியருடனும் தொடங்கப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 387 மாணவர்களும், 9 அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளியில் 2012-ஆம் ஆண்டு முதல் துலுக்காபட்டி ராமசாமி ராஜா நகரில் அமைந்துள்ள தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆதரவின்கீழ் K.G. வகுப்புகள் இயங்கி வருகின்றன. நிர்வாக பிரிவின்கீழ் 106 குழந்தைகளுக்கு 4 K.G. ஆசிரியர்களும் 1 ஆசிரியர் அல்லாத பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் திட்டங்கள்:
1 முதல் 5 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. இலவச மதிய உணவு திட்டத்தின் மூலம், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு போதுமான ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. வயது வந்தோர் சிறப்பு கல்வித் திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக இயங்குகிறது.
இணை பாடத்திட்ட மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள்:
கணினி அறிவை மேம்படுத்தவும், அடிப்படைக் கணினிக் கல்வியை வழங்கவும், 2013 ஆம் ஆண்டு முதல் ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாகத்தால் 10 கணினிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கணினி ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. 1997 முதல், ஒவ்வொரு ஆண்டும் ஹிந்தி பிரச்சார சபா தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்தி மொழி இலவசமாக கற்பிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் யோகா வகுப்பு நடத்தப்பட்டுகின்றன. பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் பரிசுகளை வெல்கின்றனர். நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வகுப்புகளில் சேர்ந்து பயனடைகிறார்கள். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், L.K.G முதல் 5 ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் கிளப் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்த சேவாஸ்ரம் (தஞ்சாவூர்), விவேகானந்த கேந்திரா ஊரக வளர்ச்சித் திட்டம் மற்றும் இதயம் வைஸ்மேன் கிளப் (விருதுநகர்) போன்ற வெளி நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வெல்கின்றனர். ராம்கோ நிர்வாகம் நடத்தும் வினாடி வினா, விளையாட்டு, கட்டுரை எழுதுதல், பாட்டு, நடனம், போஸ்டர் தயாரித்தல், தமிழ் சொற்பொழிவு மற்றும் ரங்கோலி போன்ற பல போட்டிகளிலும் மாணவர்கள் பரிசுகளை வெல்கின்றனர். ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம், மார்ச் 4 முதல் 10-ஆம் தேதிவரை தேசிய பாதுகாப்பு வாரம் மற்றும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினம் போன்ற முக்கியமான தினங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கற்றல் முறையின் ஒரு அங்கமாக, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆண்டு விழா, நவராத்திரி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை:
ராம்கோ சமூக சேவையின் மூலம் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவ பரிசோதனை வழங்கப்படுகிறது:
கண் பரிசோதனை - அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி
பல் பரிசோதனை - லட்சுமி பல் மருத்துவமனை, சாத்தூர்
முழு உடல் பரிசோதனை - வேலம்மாள் மருத்துவமனை, மதுரை.
விருதுகள் மற்றும் சாதனைகள்:
CRC (கிளஸ்டர் ரிசோர்ஸ் சென்டர்) அளவில் அறிவியல் கண்காட்சியில் சிறந்த பள்ளியாக இந்தப் பள்ளி விருது பெற்றது.
5’s விருது:
பணியை திறமையாகவும் பாதுகாப்பாகவும் செய்ய, 5’s திட்டம் பள்ளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, 17.11.2016 அன்று 5’s சான்றிதழ் பெற்றது மற்றும் அதே சான்றிதழை மீண்டும் ஒருமுறை 06.12.2019 அன்று பெற்றது. 2018- ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற 5’s தேசிய மாநாட்டின் போது PAR எக்ஸலன்ஸ் விருது பெறப்பட்டது. ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒன்றியத்துடன் (JUSE) இணைந்து இந்தியாவின் குவாலிட்டி சர்கிள் மன்றத்தின் (QCFI) 5-s சான்றிதழ் அளிக்கும் அமைப்பால் பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டது.
புகைப்படத் தொகுப்பு
மேலும் திட்டங்கள்…
கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்
இந்த திட்டம் Ok Upcycling ஸ்டுடியோவுடன் இணைந்து, கல்வி மற்றும் அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் டிசைன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை நமது சமூகத்திற்கு உணர்த்துவதும், செயல்பாட்டுக் கலை மற்றும் வடிவமைப்பை 'கழிவுகளில்' இருந்து உருவாக்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோள்
தென்னிந்தியாவின் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பு
ஆரோவில் தாவரவியல் பூங்கா தமிழ்நாட்டின் புனித தோப்புகளின் தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் ஒரு மதிப்பீட்டு கணக்கெடுப்பை நடத்துகிறது.
ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் – பேரிடர் நிவாரணம்
ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் காலங்களின் போது ராம்கோ பெரும் நிவாரணப் பணிகளைச் செய்தது.