ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் – பேரிடர் நிவாரணம்
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் திட்டம்
செயல்படும் பகுதி : பேரிடர் நிவாரணம்
திட்டத்தின் தொடக்கம் – 2017,2018 மற்றும் 2020
திட்டம்
ராம்கோ-வின் தத்துவம்
பேரிடர் மீட்புக்கான ராம்கோவின் தத்துவம் எப்போதுமே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று, அருகிலுள்ள ராம்கோ தொழிற்சாலை மற்றும் மார்க்கட்டிங் குழுவில் உள்ள எங்கள் பணியாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக உயிர்காக்கும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கி, நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான். உண்மையில் சூறாவளி போன்ற பேரிடர் நிகழ்வுகளின் தாக்கத்தை ராம்கோ முன்கூட்டியே கண்காணிக்கிறது மற்றும் பணியாளர்கள் மற்றும் ஆண்கள் குழு, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்கும்.
ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் – பேரிடர் நிவாரணம்
ராம்கோ-வால் மேற்கொள்ளப்டும் அவசரகால/பேரிடர் நிவாரண வகைகள்
புயல் மற்றும் வெள்ளம் நிவாரண வேலை
-
புயல் போன்ற பேரிடர் சமயங்களில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ராம்கோ பின்வரும் நிவாரண நடவடிக்கைகளை செய்கிறது.
-
பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு உடனடியாக உணவு பொட்டலங்கள், பால் பவுடர், அரிசி பைகள், மளிகை பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்குதல்
-
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆடைகள், போர்வைகள், பாய்கள், கொசுவர்த்தி சுருள், சானிட்டரி நாப்கின்கள், துண்டுகள்
-
குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்
-
நமது நிறுவன மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரால் நடத்தப்படும் மருத்துவமுகாம் மற்றும் மக்களுக்கு மருந்துகள் விநியோகம் செய்தல்
-
வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனரக நீர்வெளியேற்றம் செய்யும் வாகனங்களை கொண்டு நீர் வெளியேற்றம் செய்கிறோம்
-
சாலை தொடர்பை சரிசெய்ய மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி மற்றும் திறமையான பணியாளர்களை கொண்டு சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துகிறோம். மேலும் விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி சீரமைக்க அரசு மின் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
கோவிட் தொற்றுநோய் நிவாரண சேவை
கோவிட் 19 தொற்றுநோய் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ராம்கோ பின்வரும் நிவாரண நடவடிக்கைகளை வழங்கியது.
-
தொழிற்சாலை மற்றும் மைன்ஸ் பகுதிகளில் வேலை இல்லாத மற்றும் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள், அரிசி பைகள், மளிகை பொருட்கள்
-
எங்கள் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தி, சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்தோம்.
-
ஒடிசா மற்றும் கேரள அரசுக்கு கோவிட் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
திட்டம் எண்ணிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
சாத்தூர், சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு 1636 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் – கோவிட் 19 தொற்று
உயிர்கள் காப்பாற்றப்பட்டன – கோவிட் 19 தொற்று
மேலும் திட்டங்கள்…
ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி
ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.
ஸ்ரீ ராம் தொடக்கப்பள்ளி
Sriram Primary school is a Government aided co-educational school of classes from grade 1 to 5. The School was founded by Sri Dharmarakshakar P.R.Ramasubrahmaneya Rajha (the former chairman of the Ramco Cements Ltd.) on 01.08.1962.
ராம்கோ பாலவித்யா கேந்திரா
இளம்குழந்தைகள் மனதில் வலுவான அடித்தளத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன், ராம்கோ பாலவித்யா கேந்திரா 2011-ல் நம் முன்னாள் சேர்மன் குருபக்தமணி ஸ்ரீதர்மரக்ஷகர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிமணிய ராஜா மற்றும் ஸ்ரீமதி. சுதர்ஸனம் ஆகியோரால் நிறுவப்பட்டது. பள்ளியின் குறிக்கோள் "வேர்கள் முதல் பழங்கள் வரை", இது சிறார்களின் மனதை முழுமையாக வளர்ப்பதற்கான பள்ளியின் நோக்கத்தைக் குறிக்கிறது.