ராம்கோ பாலவித்யா கேந்திரா

Ramco Balavidya Kendra

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 2011

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

குறிக்கோள்கள்

இளம்குழந்தைகள் மனதில் வலுவான அடித்தளத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன், ராம்கோ பாலவித்யா கேந்திரா 2011-ல் நம் முன்னாள் சேர்மன் குருபக்தமணி ஸ்ரீதர்மரக்ஷகர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிமணிய ராஜா மற்றும் ஸ்ரீமதி. சுதர்ஸனம் ஆகியோரால் நிறுவப்பட்டது. பள்ளியின் குறிக்கோள் "வேர்கள் முதல் பழங்கள் வரை", இது சிறார்களின் மனதை முழுமையாக வளர்ப்பதற்கான பள்ளியின் நோக்கத்தைக் குறிக்கிறது.

ஆரம்பகாலங்களில் குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான வளர்ச்சியானது கல்வி மற்றும் வாழ்க்கையில் அவர்களின் எதிர்கால வெற்றியை உறுதி செய்வதற்கான திறவுகோல் என்று ஆராய்ச்சி சொல்கிறது, ஆகவே குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான வளர்ச்சியானது பாடத்திட்டத்தின் மையமாகயிருந்து, அவர்கள் பள்ளியில் ஒவ்வொரு கலந்துரையாடலிலும் ஒருங்கிணைந்து இருக்க செய்கிறது. ஆரம்ப ஆண்டு கல்வியில் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி, இத்தனை ஆண்டுகளில் ஒரு தனித்துவமான கற்பித்தல்-கற்றல் முறை உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

 

ராம்கோ பாலவித்யா கேந்திரா-வின் அமைப்பு

பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.வி.சுதா சங்கர் பள்ளியின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார். பள்ளியின் செயலாளர் திரு என்.கே. ஸ்ரீகண்டன் ராஜா. செயலாளருடன் கலந்தாலோசித்து, பள்ளியின் செயல்பாடுகளை தலைமையாசிரியர் நிர்வகிக்கிறார்.

ஆரம்பக்கால கல்விக்காக செயல்படுத்தப்பட்ட முழுமையான கல்வியின் அம்சங்கள்: 

 

  • தி டாட் லேர்னிங் சர்கிள் புரோகிராம்: 2021-22 கல்வியாண்டின்படி, தி டாட் லேர்னிங் சர்க்கிள் புரோகிராம் என்ற அனுபவமிக்க கற்றல் பாடத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். இது ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான திறன்களை உருவாக்க உதவுகிறது மற்றும் அவர்களிடம் இருக்கும் வரம்பற்ற திறனை வளர்பதாக விரிவடைகிறது. 

 

  • கருப்பொருள் அடிப்படையிலான பாடத்திட்டம்: எட்டு ஒருங்கிணைந்த கருப்பொருள்களில் கற்றல் நடைபெறுகிறது: எண் மற்றும் கணிதம், எழுத்தறிவு மற்றும் உச்சரிப்பு, மொழி மற்றும் தொடர்பு, சுற்றுச்சூழல் அறிவியல், கலை மற்றும் படைப்பு வெளிப்பாடு, இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான கற்றல். இது கற்றலை அர்த்தமுள்ளதாகவும் சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்ற உதவுகிறது.

 

  • சக்திவாய்ந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்பித்தல் முறைகள்: வெவ்வேறு குழந்தைகளின் பல்வேறு அறிவுத்திறனைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் அனைத்தும் விளையாட்டு அடிப்படையிலான மற்றும் செயல்பாடு சார்ந்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கற்றல் பகுதிகளின் நோக்கமும் வரிசையும் கற்றல் பாதைகளில் குழந்தைகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. நல்ல மாணவர் விகிதத்தை பராமரிக்க ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளமைக்கப்பட்ட முன்னேற்றக் கண்காணிப்பு முறையானது எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்காது என்பதை உறுதி செய்கிறது.

 

  • சமூக ஈடுபாடு: பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சி பற்றி ஆண்டுதோறும் நடைபெறும் PTA கூட்டத்தில் அறிந்து கொள்கிறார்கள். மாணவர்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள், அங்கு அவர்கள் விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். 

 

 

 

ராம்கோ பாலவித்யா கேந்திரா-வின் வளர்ச்சி

இப்பள்ளி கடந்த 11 ஆண்டுகளில் 180 மாணவர்களில் இருந்து, தற்சமயம் 760 மாணவர்களுடன் எல்கேஜி-யில் 9 பிரிவுகள் மற்றும் யுகேஜி-யில் 10 பிரிவுகள் என வளர்ந்துள்ளது.

மேலும் திட்டங்கள்…

Giving “Waste” a Second Life

கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்

இந்த திட்டம் Ok Upcycling ஸ்டுடியோவுடன் இணைந்து, கல்வி மற்றும் அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் டிசைன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை நமது சமூகத்திற்கு உணர்த்துவதும், செயல்பாட்டுக் கலை மற்றும் வடிவமைப்பை 'கழிவுகளில்' இருந்து உருவாக்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோள் 

Conservation of the Tropical Dry Evergreen Forest of South India

தென்னிந்தியாவின் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பு

ஆரோவில் தாவரவியல் பூங்கா தமிழ்நாட்டின் புனித தோப்புகளின் தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் ஒரு மதிப்பீட்டு கணக்கெடுப்பை நடத்துகிறது.