பந்தல்குடி மறுசீரமைப்பு
ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்
திட்டத்தின் தொடக்கம் : 2019
திட்டம்
சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,
உள்ளுர் பகுதிக்கான ஒரு பல்லூயிர் பெருக்க மையம்
ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் நிறுவனம் இங்கு சுரங்கபகுதிகளை சீரமைக்கும்போது, குவாரியின் சுவர்களில் அல்லது கீழிருக்கும் நீர்நிலைகளில் ஏராளமான உயிரினங்கள், வாழ்விட ஆதாரங்கள் எஞ்சியிருப்பதை கண்டுபிடித்தார்கள், பழங்கள் மற்றும் விதைகளை வழங்கும் பலவிதமான நாட்டு மரங்கள் மற்றும் புதர் இனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக பூச்சிகள், பறவைகள் மற்றும் சிறிய பாலுட்டிகளுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்யும். அதுவே அவற்றின் வாழ்வாதாரத்திற்கான சிறந்த உணவுசங்கிலியாக அமையும், ஆகையினால் மறுசீரமைக்கப்பட்ட சுரங்கங்கள் உள்ளுர் பகுதியில் ஒரு பல்லூயிர் பெருக்க மையமாக மாறி வருகிறது,
400 ஏக்கர் பரப்பளவில் ஒரு திட்டம்
ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் இன்று வரை பந்தல்குடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை இவ்வாறு புனரமைத்து உள்ளது. மேலும் இது போன்றே அரியலூர், ஜெயந்திபுரம் மற்றும் கர்னூல் பகுதிகளில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறது.
அபரித வளர்ச்சி
ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள், சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளையும் புதர் இனங்களையும் நடவு செய்துள்ளது. முதல் 3 வருடங்களிலேயே அவற்றில் சில மரங்கள் சுமார் 3 அடி அயரத்திற்கு வளர்ந்து விட்டன மற்றும் அதிக அளவிலான பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் மற்றும் பூச்சி இனங்களும் இந்த இடங்களுக்கு திரும்பிவந்து கொண்டிருப்பதை ஏற்கனவே பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
புகைப்படத் தொகுப்பு
வீடியோ
மேலும் திட்டங்கள்…
புதிய கற்றல் மையத்தை கட்டுதல்
தாமரை கல்வித் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆரோவில்லின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அன்னை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு புதிய கற்றல் மையத்தை உருவாக்கியது.
கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்
இந்த திட்டம் Ok Upcycling ஸ்டுடியோவுடன் இணைந்து, கல்வி மற்றும் அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் டிசைன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை நமது சமூகத்திற்கு உணர்த்துவதும், செயல்பாட்டுக் கலை மற்றும் வடிவமைப்பை 'கழிவுகளில்' இருந்து உருவாக்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோள்
தென்னிந்தியாவின் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பு
ஆரோவில் தாவரவியல் பூங்கா தமிழ்நாட்டின் புனித தோப்புகளின் தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் ஒரு மதிப்பீட்டு கணக்கெடுப்பை நடத்துகிறது.