பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : கல்வி
திட்டத்தின் தொடக்கம் : 1963
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
புகைப்படத் தொகுப்பு
திட்டம்
1963 ஆம் ஆண்டு நம் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட இந்த பாலிடெக்னிக் கல்லூரி மாநில அரசு உதவி பெறும் ஒரு தன்னாட்சி கல்வி நிலையமாகும்.
பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி. சீனிவாசன், பாலிடெக்னிக் கல்லூரியின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார். ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு என்.கே.ஸ்ரீகண்டன் ராஜாவுடன் கலந்தாலோசித்து, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை கல்லூரி முதல்வர் ஏற்பாடு செய்கிறார். நமது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமையில் ஆட்சிக்குழு உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஒரு அழகான சூழலில் அமைந்துள்ளது,
இது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டு, நியூ டெல்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE), அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 523 மாணவர்களின் கல்விக்காக 138 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆசிரியர் மற்றும் பணியாளர் குழு வேலை செய்கிறது, வளாகம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் ஒரு அமைதியான சூழலில் அழகான இயற்கைக்காட்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது
பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள்
இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) பிரிவு, இந்தியன் சொசைட்டி ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன் மாணவர்கள் பிரிவு, இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். போன்றவற்றில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் இணை பாடத்திட்ட மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளில் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பாலிடெக்னிக் கல்லூரி வழங்கும் டிப்ளோமாக்கள்
நிபுணத்துவத்தின் சிறந்த தேர்வு
வழங்கப்படும் டிப்ளமோ திட்டங்கள் (3 ஆண்டுகள், முழுநேரம், நிதி உதவியுடன்) :
- சிவில் இன்ஜினிரியங்
- மெக்கானிக்கல் இன்ஜினிரியங்
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரியங்
- மெக்கானிக்கல் இன்ஜினிரியங் (ஆர், & ஏசி)
- டெக்ஸ்டைல் டெக்னாலஜி
- மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ்
வழங்கப்படும் டிப்ளமோ திட்டங்கள் (3 ஆண்டுகள், முழுநேரம், சுயநிதி) :
-
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினிரியங்
-
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரியங்
-
மெக்கானிக்கல் இன்ஜினிரியங்
மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்க, இந்த கல்விநிறுவனம் ராம்கோ, டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ஜான்சன் லிஃப்ட்ஸ் மற்றும் செயின்ட் கோபைன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ‘தொழில் சார்ந்த தேர்வுகளை (I.B.E.)’ வழங்குகிறது.
புகைப்படத் தொகுப்பு
மேலும் திட்டங்கள்…
கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்
இந்த திட்டம் Ok Upcycling ஸ்டுடியோவுடன் இணைந்து, கல்வி மற்றும் அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் டிசைன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை நமது சமூகத்திற்கு உணர்த்துவதும், செயல்பாட்டுக் கலை மற்றும் வடிவமைப்பை 'கழிவுகளில்' இருந்து உருவாக்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோள்
தென்னிந்தியாவின் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பு
ஆரோவில் தாவரவியல் பூங்கா தமிழ்நாட்டின் புனித தோப்புகளின் தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் ஒரு மதிப்பீட்டு கணக்கெடுப்பை நடத்துகிறது.
ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் – பேரிடர் நிவாரணம்
ஒக்கி, கஜா புயல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் காலங்களின் போது ராம்கோ பெரும் நிவாரணப் பணிகளைச் செய்தது.