பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி

Sethuramammal-Primary-School

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 1958

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது. அரசு உதவி பெறும் இப்பள்ளியானது தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை மகிழ்ச்சிகரமான முறையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கல்வி கற்றவன் அறிவாளியாகிறான்" என்பதே அதன் பொன்மொழி.

பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. D.அருணா, பள்ளியின் தினசரி செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார். பள்ளியின் செயலாளர் திரு என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா. செயலாளருடன் கலந்தாலோசித்து, பள்ளி விவகாரங்களை தலைமையாசிரியை நிர்வகிக்கிறார்.

இந்தப் பள்ளி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி முறையைப் பின்பற்றுகிறது. அடிக்கடி உள்ளக மதிப்பீடு தேர்வுகள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து மதிப்பிடப்படுகிறார்கள்.

 

 

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் முழுமையான கல்வியின் அம்சங்கள்:

 

  • கற்றல் மொழி: ஆங்கிலத் மொழி அறிவை மேம்படுத்த பள்ளியில் வசதிகள் உள்ளன. மாணவர்கள் இந்தி மொழி கற்கவும் ஆண்டுதோறும் இந்தி பிரச்சார சபா திறன் தேர்வுகளை எழுத பயிற்சி பெறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்

 

  • கழிவு மேலாண்மை: பள்ளி திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றுகிறது. கழிவுகளை பிரித்தெடுக்கும் முறை கற்பிக்கப்படுவதுடன் கழிவு உற்பத்தியை குறைக்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆரோவில்லில் இருந்து ஒரு குழு வடிவமைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் கார்பாலஜி பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மேலும், பள்ளியானது ஒரு உரம் தயாரிக்கும் இடத்தை பராமரிக்கிறது.

 

  • கூடுதல் பாடத்திட்டங்கள்: சொற்பொழிவு போட்டிகள், ஓவியம் வரைதல், ஸ்லோகம் சொல்லுதல் மற்றும் கதை சொல்லும் நிகழ்வுகள் போன்ற கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளில் பங்கேற்க ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

 

  • சமூக ஈடுபாடு மற்றும் விளக்கக்காட்சி திறன்: கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்கள் சமூகத்துடன் (பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள்) ஈடுபட்டு கல்வி கற்பிப்பதற்கும் ஆண்டு PTA கூட்டம் ஒரு வாய்ப்பாகும். இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் குழு உணர்வை ஊக்குவிக்கின்றன. மாணவர்கள் தங்கள் கண்காட்சிகளை பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்குகிறார்கள். மாணவர்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள், அங்கு அவர்கள் கலாச்சார நிகழ்வுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் திறமைக்கான விருதுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஐந்தாம் வகுப்பின் ஒட்டுமொத்த சிறந்த மாணவருக்கு “சிறந்த வெளிச்செல்லும் மாணவர் விருது” வழங்கப்பட்டு அதனுடன் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

 

 

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளியின் வளர்ச்சி:

    20 ஆசிரியர்களுடன் 841 மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பள்ளி வளர்ந்துள்ளது. சேர்மன் ஸ்ரீ பி,ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் தலைமையாசிரியை திருமதி D. அருணா ஆகியோரின் கீழ் பள்ளி தொடர்ந்து வளர்ந்து செழித்து வருகிறது.

     

    மேலும் திட்டங்கள்…

    Chinmaya Vidyalaya SLR & PACR Matriculation

    சின்மயா வித்யாலயா SLR & PACR மெட்ரிகுலேஷன்

    சின்மயா வித்யாலயா பலதரப்பட்ட பின்னணியில் இருந்து திறமையான சிறுவர் மற்றும் சிறுமிகளை வரவேற்கிறது. கல்வியியல் வளம் பெற்றவர்களாக, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட திறன்கள் மற்றும் ஆர்வங்களில் தகுதி பெற்றவர்களாக, மற்றவர்களின் தேவைகளை உணரக்கூடியவர்களாக, மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பவர்களாக மற்றும் இரக்கமுள்ளவர்களாக, மொத்தத்தில் எங்கள் பள்ளி மாணவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றும் வகையில் சகிப்புத்தன்மையுள்ள, இணக்கமான சமூகத்தை எங்கள் பள்ளிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன:

    Arsha Vidya Mandir Senior Secondary School

    அர்ஷா வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி

    அர்ஷா வித்யா மந்திர் (AVM) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் பள்ளியாகும், இது பாலர் வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை கல்வியை வழங்குகிறது.

    Ramco Institute of Technology

    ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

    குறைந்த கல்விக்கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் 2013-ல் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்.ஐ.டி) நிறுவப்பட்டது,