Ok அப்சைக்ளிங் ஸ்டுடியோ
Ok Upcycling Studio ஆரோவில்-லில் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி உருவாகும் கழிவுகளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த ஸ்டுடியோ உருவானது.
அப்சைக்ளிங் ஸ்டுடியோவின் முதல் அணுகுமுறையானது கழிவுகள் மற்றும் பூமியில் அதன் பேரழிவு விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மக்கள் மனதில் கழிவுகள் பற்றிய எண்ணத்தை மாற்றுவதும், குப்பை கிடங்குகளின் சுமையை குறைப்பதும் இதன் நோக்கம்.
சுற்றுச் சூழலுக்கு நல்ல மாற்றத்தை தரும் கழிவுகள் பற்றிய அறிவார்ந்த அனுகுமுறையை அனைவரிடமும் விதைப்பதே அவர்களின் நோக்கம். இதுவே பூமியில் ஆரோக்கியமான வாழ்க்கையை வளர்க்கும்.
இதை அடைவதற்குண்டான வழிகளில் ஒன்றாக பெருநிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் தனிநபர்களுக்கான அப்சைக்ளிங் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.
Ok Upcycling Studio ராம்கோ சிமெண்ட் மற்றும் ராஜபாளையம் பள்ளிகளுடன் இணைந்து அப்சைக்ளிங் திட்டங்களை மேம்படுத்தவும், கழிவுகளை கலை நிறுவல்கள் மற்றும் பிற நடைமுறை பயன்பாடுகளுக்கு உபயோகபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஓகே அப்சைக்ளிங் ஸ்டுடியோவை பொறுத்தவரையில் "கழிவுகள் விலைமதிப்பற்றவை".
ஒரு குழுவாக அவர்கள் கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களை உருவாக்குவதால் கழிவுகளுக்கு மறுவாழ்க்கையை கொடுக்கிறார்கள்.