இந்தியன் ஸ்கூல்ஸ் டிபேட்டிங் சொசைட்டி
தி இந்தியன் ஸ்கூல்ஸ் டிபேட்டிங் சொசைட்டி (ஐ,எஸ்,டி,எஸ்) இலாப நோக்கமற்ற இந்தியாவின் மிகப்பெரிய விவாத கல்விச்சங்கங்களில் ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் விவாதத்திறன் மற்றும் பொது அறிவை மேம்பாடுத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகளை நடத்துகிறது. உலகின் மிக மதிப்புமிக்க விவாத போட்டியாக கருதப்படும் உலக பள்ளிகள் விவாத சேம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியாவின் பிரதிநிதி மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறது.
இதை 2008-ல் ராம்கோ நிறுவி, அப்போதிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. 2008-ல் சென்னையில் 25 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் 1000 மாணவர்கள் என்ற இலக்கை அடைந்து வருகிறது. ஐ,எஸ்,டி,எஸ், இந்திய அணி 2019-ஆம் ஆண்டிற்கான உலக பள்ளிகள் விவாத சேம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. மேலும் 2018 மற்றும் 2019 ஆண்டிற்கான “உலகில் சிறந்த பேச்சாளர்” என்ற விருதினையும் பெற்றது.
2022 Il ISDS
“விவாதம் சக்தி வாய்ந்தது. கடின உழைப்புதான் அனைத்துமாக உள்ளது. நமது அடிப்படையில் பெருமைகொள்வது ஒரு திறவுகோலாகும். பன்முகத்தன்மை வலிமையானது."