கல்ராயன் மலைகளில் உள்ள மழைவாழ் மக்கள் குடியிருப்புக்களில் வேளாண்மை, ஊட்டச்சத்து, சுகாதாரம் & கல்வி
திட்டம்
சேலம், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி (முன்னாள் விழுப்புரம்) மாவட்டங்களை ஒட்டி இருக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கல்ராயன் மலைகள் பல தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வீடாக உள்ளது, இந்த கல்ராயன் மலைக்கிராமங்களில் சுகாதாரம், குழந்தை ஊட்டச்சத்து, கல்வி, விவசாய வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதை ராம்கோ-வின் ஆதரவு உறுதி செய்துள்ளது.
சமுதாய மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ராம்கோ ஆதரவுடன், கல்ராயன் மலைகளில் குழந்தை ஊட்டச்சத்து, நீர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விவசாய வாழ்வாதாரம் ஆகிய முக்கிய திட்டங்களை இகோ ப்ரோ மேற்கொண்டுள்ளது.
கல்ராயன் மலைகளில் குழந்தை ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி
குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. வருடாந்திர சுகாதார சோதனை மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுக்கு நன்றி. கோவிட-19 பொதுமுடக்கம் இருந்த சமயத்தில், மேல்தொரடிபட்டு, முண்டியூர் மற்றும் மட்டப்பட்டு பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகுந்த மற்றும் ஆற்றல் தரக்கூடிய வேகவைத்த முட்டைகள், மசாலா வடைகள், பலவிதமான பருப்புவகைகள் மற்றும் அரிசி ஆகியவற்றை உள்ளடக்கிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. எழுத்தறிவு மற்றும் புத்தகம் வாசிப்பு நாள் மட்டபட்டு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுத்தம் மற்றும் சுகாதாரம்
கிராமங்களில் நிலவும் சுத்தம், சுகாதாரம் மற்றும் குறைந்த அளவு நீர் வழங்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சுமார் 60 முதல் 70 பேர்கள் பயன்படுத்தகூடிய வகையில் "யூரின் டைவர்ட்டிங் டிரை டாய்லெட்ஸ்" UDDT எனப்படும் 11 " சிறுநீர் – திசைதிருப்பும் உலர் கழிப்பறைகள்" கட்டப்பட்டுள்ளன. சுகாதாரத்தை பேணி காக்க, இந்த கழிப்பறைகளின் பராமரிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகளிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீர் மற்றும் மலம் உலர்த்துதல் முறையில் மீண்டும் பயன்படுத்த பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு, தோட்டங்களிலும் பண்ணைகளிலும் உரமாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை விவசாயம்
கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன சாகுபடி பற்றிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மேல்தொரடிபட்டு மற்றும் தாழ்தொரடிபட்டு சேர்ந்த 6 விவசாயிகள் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட அரிசி மற்றும் தினை பயிர்களின் திருப்திகரமான விளைச்சலுடன் இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களின் விளைபொருட்கள் வீட்டிலோ, உள்ளுரிலே பயன்படுத்தபடாமல், நல்ல வருமானம் தரக்கூடிய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன
நீண்ட காலமாக, குறைந்தபட்சம் சில குக்கிராமங்களையாவது திறந்தவெளி கழித்தல் இல்லாததாக மாற்றுவதே நோக்கமாகும். மேலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் இயற்கை உணவுப்பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பல விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். அதேசமயம், மண் அரிப்பை கட்டுபடுத்துதல், மேம்படுத்தப்பட்ட நீர் மற்றும் மண் மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தைப் பற்றிய புரிதலும் எளிதாக்கப்படுகிறது.
உள்ளுர் மக்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி குறித்து தாங்களே சுயமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதே சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் முடிவான நோக்கமாகும்.
ஆவணங்கள்
மேலும் திட்டங்கள்…
ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்
ராம்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள், ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக 1993ல் ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். இப்போது இது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி
ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி
இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.