இகோ ப்ரோ

இகோப்ரோ – ஆரோவில்லேயில் அமைந்துள்ளது. இது இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை, முக்கியமாக விவசாயம் மற்றும் ஊட்டச்சத்துகள் சூழலுக்கான நீர் மற்றும் மண்; ஆரோக்கியம், சுகாதாரம், கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

பயனுள்ள நுண்ணுயிர் (Effective Microorganism) பொருள்களை தயாரிக்கும் மாப்லே ஆர்க்டெக் (Maple Orgtech) கொல்கத்தா நிறுவனத்தின் டீலராக இகோப்ரோ இருந்து வருகிறது

மேலே சொல்லப்பட்டுள்ள துறைகள் மற்றும் பயனுள்ள நுண்ணுயிர் தயாரிப்புக்களின் பயன்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை அளித்து வருகிறது. இது சம்பந்தமான கல்வித்திட்டங்களை, அரசு மற்றும் அரசுசாரா ஊழியர்களுக்கும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அளித்து வருகிறோம்.

2015 முதல், நகராட்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை, அதாவது ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் ஆலைகள், ராம்கோவால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் 2018 முதல் ராம்கோ சிமெண்ட்ஸ் தமிழ்நாடு தொழிற்சாலைகளை மேம்படுத்த ராம்கோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். .

 

2018 ஆண்டிலிருந்து, கல்ராயன் மலைகளில் உள்ள மழைவாழ் மக்கள் குடியிருப்புக்களில் இகோப்ரோ-வின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் ராம்கோ சி,எஸ்,ஆர் நிதியிலிருந்து செய்யப்பட்டு வருகின்றன. கோவிட் லாக்டவுன் காரணமாக பல தடங்கல்கள் ஏற்ப்பட்ட போதிலும், துவக்கப்பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டன. விவசாயநிலங்களில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. கரிம (ஆர்கானிக்) உணவு பயிர்கள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டன. பல இகோசன் கழிவறைகள் கட்டப்பட்டு, அவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

Eco Pro team
இகோ ப்ரோ குழு

"நம்பிக்கைகளும் மனஉறுதிபாடுகளும் சக்திவாய்ந்த மாற்றத்திற்குhpய காரணிகளாகும்”

டாக்டர் லூகாஸ் டெங்கல்

இகோ ப்ரோ

eco-pro_logo2

இகோ ப்ரோ வழங்கும் திட்டம்

சமுதாய மேம்பாடு

கல்ராயன் மலைகளில் உள்ள மழைவாழ் மக்கள் குடியிருப்புக்களில் வேளாண்மை, ஊட்டச்சத்து, சுகாதாரம் & கல்வி