சின்மயா வித்யாலயா SLR & PACR மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப் பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : கல்வி
திட்டத்தின் தொடக்கம் : 1970
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
புதுப்பிப்புகள்
புகைப்படத் தொகுப்பு
திட்டம்
குறிக்கோள்கள்
சின்மயா வித்யாலயா பலதரப்பட்ட பின்னணியில் இருந்து திறமையான சிறுவர் மற்றும் சிறுமிகளை வரவேற்கிறது. கல்வியியல் வளம் பெற்றவர்களாக, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட திறன்கள் மற்றும் ஆர்வங்களில் தகுதி பெற்றவர்களாக, மற்றவர்களின் தேவைகளை உணரக்கூடியவர்களாக, மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பவர்களாக மற்றும் இரக்கமுள்ளவர்களாக, மொத்தத்தில் எங்கள் பள்ளி மாணவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றும் வகையில் சகிப்புத்தன்மையுள்ள, இணக்கமான சமூகத்தை எங்கள் பள்ளிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன:
சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் அமைப்பு
பள்ளியின் முதல்வர் திரு. டி.சிவராஜ்குமார் பள்ளியின் தினசரி செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். பள்ளி தாளாளர் ஸ்ரீ எஸ்,எஸ். ராமச்சந்திர ராஜா. தாளாளர் அவர்களுடன் கலந்தாலோசித்து, பள்ளி நடவடிக்கைகளை முதல்வர் நிர்வகிக்கிறார்.
சின்மயா வித்யாலயா பி.ஏ.சி.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் அமைப்பு
பள்ளியின் முதல்வர் (பொறுப்பு) திருமதி டி. உஷா பள்ளியின் தினசரி செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். பள்ளி தாளாளர் ஸ்ரீமதி ஆர். சிட்டம்மாள். தாளாளர் அவர்களுடன் கலந்தாலோசித்து, பள்ளி நடவடிக்கைகளை முதல்வர் (பொறுப்பு) நிர்வகிக்கிறார்.
எங்கள் நோக்கங்கள்
-
மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மீதான அன்பை வளர்த்தல்
-
தெளிவான மதிப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒத்திசைவான பாடத்திட்டத்தை உருவாக்குதல்
-
அறிவு, புரிதல் மற்றும் திறன்களைக் கொண்டு, மாணவர்களின் முழுமையான கல்வித் திறனை அடைவதற்கு அவர்களைத் தயார்படுத்துதல்
-
மதிப்பீடுகள் கடுமையானதாகவும் சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்தல்
-
மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ச்சியானக் கல்வி முறையை வழங்குதல்.
-
உற்சாகமான, சவாலான, கல்வியில் லட்சியத்துடன், வேடிக்கையான அன்பான மனநிலையை வளர்த்தல்
நாங்கள் ஊக்குவிக்க விரும்பும் கொள்கைகள் மற்றும் திறன்களின் முக்கிய தொகுப்பு
-
விசாரணை
-
படைப்பாற்றல்
-
சுதந்திரமான கற்றல்
-
சிக்கல் தீர்க்கும் திறன்
-
திறனாய்வு சிந்தனை
-
தொடர்பு திறன்
-
குழுப்பணி
-
சர்வதேச விழிப்புணர்வு
எங்கள் குறிக்கோள்களுக்கு ஏற்ப, முடிந்தவரை பரந்த மற்றும் சமநிலையான பாடத்திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம். "சமச்சீர் கல்வி" பாடத்திட்டத்தின் அடிப்படையில் எங்களால் எங்கள் பாடத்திட்டத்தை வடிவமைத்து உருவாக்க முடியும், ஆனாலும் அது எங்களை கட்டுப்படுத்தப்படவில்லை.
கல்வி மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள், ஆன்மீக மேம்பாடு மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதையும் பள்ளி நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளி அதன் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மனித உரிமைகளை மதிக்கிறது, அவர்கள் பள்ளியின் சட்டபூர்வமான கொள்கைகளை புரிந்துகொள்கிறார்கள். விதிகள் சில சமயங்களில் தனிநபர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உயர்தர கற்பித்தல் மற்றும் கவனம் அளிக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் பெற்றோர்களை அழைத்து எங்களுடன் கலந்துரையாட செய்கிறோம்.
ஊழியர்களிடையே, மாணவர்களிடையே மற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல உறவுகளை வளர்ப்பதே எங்கள் பள்ளியின் நெறிமுறை.
பள்ளியின் முக்கிய அம்சங்கள்
விசாலமான 9.61 ஏக்கர் வளாகம் * மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணி * கணினிமயமாக்கப்பட்ட பள்ளி மேலாண்மை அமைப்பு * பயோமெட்ரிக் வருகை பதிவேடு * மழலையர் பள்ளி வகுப்புகளுக்கான தீம் அடிப்படையிலான பாடத்திட்டம் * மாண்டிசோரி ஆய்வகம் • KG-விளையாட்டு பூங்கா • நன்கு மேம்படுத்தப்பட்ட கணிதம், கணினி ஆய்வகங்கள் & அடல் டிங்கரிங் ஆய்வகம் - STEAM பாடத்திட்டம் • இன்ட்ரக்டிவ் வெள்ளை பலகைகள் • விரிவான நூலகம் • கலை மற்றும் கைவினை வகுப்புகள் • திறந்தவெளி அரங்கு • நன்கு தகுதியான, அனுபவம் வாய்ந்த, அன்பான மற்றும் நல்ல ஊதியம் பெறும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் • ஆசிரியர்-மாணவர் விகிதம் 1 : 19 • ஆசிரியர்கள் மூலம் வழக்கமான நடத்தை மற்றும் கல்வி ஆலோசனை • முழுமையான வளர்ச்சி: உடல், மனம் மற்றும் ஆன்மீகம் • ஆரம்ப வகுப்புகளில் விளையாட்டு வழி கற்பித்தல் • 9 ஆம் வகுப்பு வரை இந்தி மற்றும் பேச்சு சமஸ்கிருதம். • மதிப்பூட்டப்பட்டக் கல்வி - சின்மயா விஷன் திட்டம், வாழ்க்கை-ஒரு- ஆராதனா & பூர்ண வித்யா • திறன் அடிப்படையிலான சோதனை மற்றும் மதிப்பீடு • புதுமையான ஆன்லைன் கணிதப் பயிற்சிகள் •இன்ட்ரக்டிவ் I-T செயல்படுத்தப்பட்ட கல்வி, அறிவை செயலாக்குதல் மற்றும் ஒருங்கிணைப்பதில் திறனை மேம்படுத்துதல் • SUITS திட்டம் • ஆதரவு, ஊக்கமளிக்கும் மற்றும் பன்முகச் சூழல் மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளை ஒருங்கிணைக்க உதவுகிறது •• ASSET, மைண்ட்ஸ்பார்க் மற்றும் விரிவான மதிப்பீடு • தொழில் சார்ந்த கல்வித் திட்டங்கள் • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் • உட்புற விளையாட்டு வசதி • கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கால்பந்து மைதானங்கள் • கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள் • தடகள விளையாட்டுகளுக்கான தடங்கள் மற்றும் மைதானங்கள். இணை பாடத்திட்ட நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த களம் • பள்ளி நாட்குறிப்பு • மாணவர்களின் முன்னேற்றம் குறித்த அவ்வப்போது அறிக்கைகள் • RO குடிநீர் • CCTV கேமராக்கள் • வழக்கமான ஆசிரியர்-பெற்றோர் சந்திப்புகள் • முன்னாள் மாணவர் சங்கம்
முடிவுகள்
மெட்ரிக் மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் எப்போதும் 100% தேர்ச்சி • ஒரே மாதிரியான கல்வி முடிவுகள் • மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டுகளில் பல சாதனைகள்
புதுப்பிப்புகள்
சின்மயா வித்யாலயா-வில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானம்
அறக்கட்டளையானது ராஜபாளையத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பி,ஏ,சி.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளின் தொகுப்பைக் கட்டியது. 6,545 சதுர அடியில் தரை தளத்தில் ஆறு கூடுதல் அறைகளையும், முதல் தளத்தில் 5,300 சதுர அடியில் ATAL ஆய்வகம் மற்றும் மல்டி மீடியா கிளாஸ் அறையும் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது, 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் 550 மாணவர்களுக்கான பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை நடத்துவதற்கான பிரத்யேக இடங்களாக அறைகள் மற்றும் ஆய்வகம் செயல்படும். அறக்கட்டளையின் பொறியாளர் கட்டுமான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
மாணவர்கள் பல்வேறு திறன்களை ஆராய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தரைதளத்தில் கைவினைப்பொருட்கள் அறை, ஓவியம் வரையக்கூடிய இடம், களிமண் வடிவமைத்தல் இடம், சிற்ப அறை, நடனம் மற்றும் இசை அறைகள் ஆகியவை உள்ளன. முதல் தளத்தில், ATAL ஆய்வகம் மற்றும் மல்டி மீடியா வகுப்பு அறை ஆகியவை ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனைக் கற்க கட்டப்பட்டுள்ளன.
எதிர்கால சாத்தியம்:
-
பல்நோக்கு வகுப்பறைகள் கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
-
புதுமைப்படுத்தவும் புதிய யோசனைகளை செயல்படுத்தவும் மற்றும் மாணவர்களால் சமூக தொடர்புடைய திட்டங்களைச் செய்யவும் ATAL ஆய்வகத்தை பயன்படுத்தலாம்.
-
போட்டி நிகழ்வுகளுக்கு மாணவர்களைப் தயார்படுத்த ஆசிரியர்கள் இடத்தைப் பயன்படுத்தலாம்.
-
திறமையான கைவினைஞர்கள் மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்தலாம்.
புகைப்படத் தொகுப்பு
மேலும் திட்டங்கள்…
அர்ஷா வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி
அர்ஷா வித்யா மந்திர் (AVM) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் பள்ளியாகும், இது பாலர் வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை கல்வியை வழங்குகிறது.
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
குறைந்த கல்விக்கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் 2013-ல் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்.ஐ.டி) நிறுவப்பட்டது,
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது.