ஆத்மப்ராஸரா
ஒரு திட்டம்: அன்னா சாண்டி & அசோசியேட்ஸ்
செயல்படும் பகுதி : ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
திட்டத்தின் தொடக்கம் : 2021
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
திட்ட வீடியோக்கள்
திட்டம்
ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி
ராஜபாளையத்தில் ஆத்மப்ரஸாரா
மனஆரோக்கியம் என்பதை களங்கமாக பார்க்காமல், அதற்கு முன்னுரிமை அளிக்கும் சமூகத்தை உருவாக்குவதை ஆத்மப்ரஸாரா சாத்தியமாக்குகிறது. மற்றும்; இராஜபாளையத்தை நம் நாட்டின் முன்னுதாரண நகரமாக கட்டமைப்பதற்காக பின்வரும் தேவைகள் இருக்கும் இடங்களில் அதற்கான சூழல்களை உருவாக்குகிறது :
-
சமூகத்தின் மனநலன் குறிப்பாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்கிய அவசர தேவையான மனநலன்
-
சமூகத்தில் பெண்களின் நல்வாழ்வில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் முக்கிய பண்புகளான சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்
-
மாற்றத்தின் தேவையையும் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தலின் முக்கியத்துவத்தையும் பாதமான நிலையிலிருந்து மீள்கின்ற திறனும் கொண்டு செயல்மிக்க நகரமாக
இராஜபாளையம் எழுகிறது.
ஆத்மபிரஸாராவின் ஆலோசனை சேவைகள்
சமஸ்கிருதத்தில், ஆத்மபிரஸாரா என்றhல் ஆன்மாவுடன் பரவுதல் என்று பொருள். அன்னா சாண்டி மற்றும் அசோசியேட்ஸ் உடன் இணைந்து ஆத்மபிரஸாரா செயல்படுத்தப்படுகிறது. 2021 ஆண்டு ஆரம்பத்தில் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டப்பட்டவர்கள் ஆத்மபிரஸாரா கருத்துரை ஆலோசனைகளை பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள்.
திட்ட வீடியோக்கள்
மேலும் திட்டங்கள்…
ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்
ராம்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள், ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக 1993ல் ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். இப்போது இது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி
ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி
இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.