எங்களைப்பற்றி

$

எங்கள் வரலாறு

$

எங்கள் குழுமம்

எங்கள் வரலாறு

 

ராம்கோவின் வரலாறு ஒரு குடும்பம் மற்றும் ஒரு பாரம்பரியத்தின் வரலாறு. இந்த வரலாறு ஸ்ரீ பூசப்பாடி சின்னைய ராஜா – ஸ்ரீமதி சிட்டம்மாள் தம்பதியினருக்கு 1894-ல் மகனாக பிறந்த ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்களிடமிருந்து தொடங்கியது. இராஜபாளையம் கிராமத்தில் தென்னிந்திய பொருளாதார வசந்தத்திற்கு அவர் வித்திட்டார்.

1938 செப்டம்பர் மாதம் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் நூற்பாலையை தொடங்கியதன் வாயிலாக அவரது எதிர்காலம் மற்றும் நாடு பற்றிய கனவுகள் நனவாகியது, இந்த ஆலையானது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் தொழிலாளர் அமைச்சராக இருந்த ஸ்ரீ வி.வி. கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6800 கதிர்களை கொண்டிருந்த இந்த ஆலையானது இராஜபாளைத்தின் தொழில்துறை வளர்ச்சியில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

எங்கள் வரலாறு

கடந்து வந்த பாதை

^
1938

ஸ்தாபனம்

திரு. பி.ஏ.சி. ராமசாமி ராஜா இராஜபாளையத்தில் முதல் நூற்பாலையை தொடங்கினரர். இதுவே பின்னர் ராம்கோ குழுமத்தின் மையப் புள்ளியாக மாறியது, தொழில் நுட்பம் மற்றும் தரம் ஆகியவற்றில் அவரது கூர்மையான கவனம் ஒரு தலைமுறை தொழில் முனைவோருக்கு உந்துதலாக இருந்து, ராம்கோ குழுமத்தின் ஒருங்கிணைந்த தொலைநோக்கு பார்வைக்கு அடிப்படையாக அமைந்தது,

^
1962

பொறுப்பு ஒப்படைத்தல்

1962 செப்டம்பர் 3 தேதியன்று இரவு திரு. பி.ஏ.சி. ராமசாமி ராஜா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவரது மகனை அழைத்தார் ராமசுப்பிரமணிய ராஜா அவரது படுக்கையருகில். "இனி நம்பிக்கை இல்லை", அவர் கிசுகிசுத்தார், "இப்பொழுதிலிருந்து நீதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்"

^
ஸ்ரீ பி. ஆர். ராமசுப்பிரமணிய ராஜா

முன்னாள் சேர்மன்

அவரின் ஆற்றல் மிக்க தலைமையின்கீழ் ராம்கோ குழுமம் பல மடங்கு வளர்ந்தது. அவரது படைப்புத்திறன்கள் மற்றும் தரத்திற்கான தேடலானது ராம்கோ குழுமத்தை இந்தியாவில் மிகவும் பாராட்டப்படும் வணிகக் குழுக்களில் ஒன்றாக மாற்றியது,

ராம்கோ குழுமம் முதலீடு செய்த ஒவ்வொரு துறையிலும், புதிய தொழில்நூட்பங்கள் மற்றும் மேலாண்மை முறைகளை மாற்றியமைப்பதில் உள்ளார்ந்த நம்பிக்கையின் வாயிலாக அவர் இதை அடைந்தார். அவர் புதுமையான மற்றும் திறமையான நிர்வாக நடைமுறைகளை பின்பற்றியதன் விளைவாக, ராம்கோ குழும நிறுவனங்கள் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் விஞ்சி வருகின்றன. இந்தியா முழுவதும் நவீன உற்பத்தி தொழிற்சாலைகள், நூற்பாலைகள் மற்றும் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவுவதே அவரது தொலைநோக்கு ஆர்வமாக இருந்தது.

ஸ்ரீ ராமசுப்பிரமணிய ராஜா விட்டுச் சென்ற மரபு என்பது சிமெண்ட், ஜவுளி, கட்டுமான பொருட்கள், மென்பொருள், அனல் மின்சாரம் மற்றும் காற்றாலைகள் போன்றவற்றில் ராம்கோ குழுமத்தின் உறுதியான நிதி சாதனைகள் மட்டுமல்ல. அவரது உண்மையான மரபு என்பது வலுவான மதிப்புமிக்க கட்டமைப்பு, நெறிமுறைகள் மீதான அர்ப்பணிப்பு மற்றும் பன்மடங்கு சமுக மேம்பாட்டு திட்டங்கள்

^
பி. ஆர். வெங்கட்ராம ராஜா

சேர்மன்

ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களுக்குப்பின். திரு. பி. ஆர். வெங்கட்ராம ராஜா குழுமத்தின் சேர்மனாக இருந்து, குழுமத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறார். இந்தியாவில் மெடராஸ் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்,

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளில் தனது உறுதியான கவனத்தை செலுத்தி, ராம்கோ குழுமத்தை அதன் தரமான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க அதனை வழிநடத்துவதில் திரு. பி. ஆர். வெங்கட்ராம ராஜா முக்கிய பங்கு வகிக்கிறார். பல்வேறு தொழில்களில் அவரது உயர்ந்த மற்றும் மாறுபட்ட அனுபவம், இன்று 1 மில்லியன் டாலர் தொழில் துறை நிறுவனமாக பரிணமித்திருக்கும் ராம்கோ குழுமத்தின் உந்து சக்தகளில் ஒன்றாகும்,

நிறுவன மேலாண்மை பயன்பாடுகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தும் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை பி. ஆர். வெங்கட்ராம ராஜா நிறுவினார். "தொழில் நுட்பமே உங்களை முன்னோக்கி வைத்திருக்கிறது" என்ற அவரின் அடிப்படை தத்துவம், சிறந்த தொழில் நுட்பத்தை கிடைக்க செய்யும் வகையில், ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான அவரது நிலையான முயற்சிகளில் பிரதிபலிக்கறது, அவர் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை, உலகின் சிறந்த 100 எண்டர்பிரைஸ் சொல்யுஸன் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்.

ராம்கோ குழுமம்

 

ராம்கோ குழுமம் இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய குழுமங்களில் ஒன்றாகும் மற்றும் சேவைகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. குழுமமானது ஜவுளி, சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள் முதல் மென்பொருள் தீர்வுகள் என பன்முகப்பட்ட தொழில் குழுமமாக பரந்து விரிந்துள்ளது,

Ramco-Cements-Logo

ராம்கோ சிமெண்ட்ஸ்

  • நாட்டின் 5வது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்
  • தென்னிந்தியாவின் மிகப் பிரலமான சிமெண்ட் பிராண்ட்
  • ரெடி மிக்ஸ் கான்கிரீட் மற்றும் டிரை மார்ட்டர் பொருள்களை உற்பத்தி செய்கிறது
  • நாட்டின் மிகப் பெரிய காற்றாலைகளில் ஒன்றை கொண்டுள்ளது
Ramco-industries-logo

ராம்கோ இண்டஸ்டிரீஸ்

  • முன்னணி கட்டுமான பொருட்கள் நிறுவனம்
  • கால்சியம் சிலிகேட் பலகைகள், தரை ஓடுகள், பைபர் சிமெண்ட் பலகைகள், ஓடுகள் மற்றும் மேற்கூரை சீட்டுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது,
  • இந்த பொருட்கள் சர்வதேச தரத்துடன் சுற்றுச் சூழல் பாதுகாப்புடன் கூடிய மாற்றுப் பொருளை அளிக்கிறது,
Ramco Textiles

ராம்கோ டெக்ஸ்டைல்ஸ்

  • இந்தியாவில் முதல் நூற்பாலை (1938)
  • தொழில் துறையில் மிக திறமையான நூற்பாலை
  • பருத்தி நூல் உற்பத்தியில் தரம் மற்றும் விலைக்கான ஒரு சிறந்த தொழில் தரநிலையை உருவாக்கியுள்ளது.
  • ராம்கோ நூற்பாலை பிரிவு 6 நூற்பாலைகளை கொண்டது :
ramco-logo-blue

ராம்கோ சிஸ்டம்ஸ்

  • புதுமையான வணிக தீர்வுகள்
  • ERP, HR & Payroll, Logistics, Aviaiton, EAM
  • 35+ நாடுகளில் 28 அலுவலகங்கள்

எங்கள் அமைவிடம்

ராம்கோ சமூக சேவைகள்

நம் உலகம் மாறிக்கொண்டே வருகிறது. சமீபத்திய நிகழ்வுகள் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மற்றும் நாம் கற்பனை செய்ததை விட நாம் அதிகமாகவே இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிகிறோம். ஆகவே நமது சவால்களும் அவ்வாறே உள்ளன. இரக்கம், அன்பு மற்றும் விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை சிறப்பாக அனுபவிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு கண்ணோட்டத்திற்கும் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள செயல் தேவை.

கல்வி, மனநலம், சுற்றுசூழல், கலை மற்றும் கலாச்சாரம், அவசரகால நிவாரணம், நகர திட்டமிடல் மற்றும் சமூக மேம்பாடு போன்றவற்றிற்கான இலக்குடன் கூடிய புது முயற்சிகளை ராம்கோ சமூக சேவைகள் முன்னெடுத்து வருகின்றன. இந்த பகுதிகளில் நடைபெறும் எங்களது சேவைகளை பற்றி அறியவும், தங்களது கருத்தை எங்களுக்கு தெரிவிக்கவும், கேள்விகள் கேட்கவும் மற்றும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் உங்களை வரவேற்கிறோம்.

சமூக சேவைகள் செய்வதில் நீங்கள் ஒரு தன்னார்வலராகவோ அல்லது பங்குதாரராகவோ இருந்தால், தங்கள் ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் சிறந்தவர்கள் என்பதையும், நீங்கள் இன்றி எதும் சாத்தியமில்லை என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். நன்றி

ராம்கோ சமூக சேவைகள் இணையதளத்தை பார்வையிட்டதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. எங்கள் சேவைகளை நீங்கள் ஆராய்ந்தறிந்து மகிழ்ந்திருப்பீர்கள் என்றும், இது இந்த உலகிற்கு தங்களது சிறப்பான பங்களிப்பை உருவாக்க உத்வேகம் அளித்திருக்கும் என்றும் நம்புகிறேன்.

நிர்மலா ராஜா

தலைவர், ராம்கோ சமூக சேவைகள்

ராம்கோவில் நாங்கள் கவனத்தில் கொள்வது

  • ^எடுப்பதை விட அதிகமாக கொடுப்பது
  • ^மனித ஆற்றலை வளர்ப்பது
  • ^"திருப்பி கொடுப்பது" என்ற எங்கள் ஸ்தாபகரின் பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொள்வது
  • ^சமுக சேவையை ஒரு கடமையாக பார்க்காமல் அதை நமது பொறுப்பாக பார்த்தல்.