ஆரோவில்லே தாவரவியல் பூங்கா
ஆரோவில்லே தாவரவியல் பூங்கா 50 ஏக்கர் பரப்பளவில் ஆரோவில்லே சர்வதேச நகரத்தில் அமைந்துள்ளது. இங்கே 1500க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் சொந்த தாவரங்களை வளர்க்க ஊக்குவிப்பதில் சிறப்பு ஆர்வம் கொண்டுள்ளது. பெண்கள் குழுக்களுக்கு மற்றும் பூர்விக தாவரங்களை பற்றி படிக்க உதவும் மக்களுக்கு “சுற்றுச்சூழல் தோட்டக்கலை” என்ற குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆழ்ந்த பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன., ராம்கோவின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டம் (சி,எஸ்,ஆர்) இந்த பயிற்சி வகுப்புகள் நடத்த இரண்டு வருடங்கள் உதவியது.
ஆரோவில்லே தாவரவியல் பூங்கா “தாவரவியல் சேவைகள்” என்ற வணிகப்பிரிவை கொண்டுள்ளது. இது நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களை நடத்துகிறது. அவற்றில் பல இப்போது ராம்கோ நிறுவனத்தின் பல்வேறு சுரங்கப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. ஆரோவில்லே தாவரவியல் பூங்காவில் ஒரு பெரிய பூர்வீக மர நாற்றங்கால் உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்கிறது. சமீபத்தில் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பை படிப்பதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் 3 வருட திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்திற்கு ராம்கோ பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டம் (சி,எஸ்,ஆர்) நிதியின் ஆதரவை பெற்றுள்ளோம்.
ஆரோவில்லே தாவரவியல் பூங்கா குழு
"“இயற்கையுடனான தொடர்பு தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி பாதையில் செல்வதற்கான உறுதியான பாதையாகும்”