20 கல்வி நிறுவனங்கள்

School in Mundiyur

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளின் திட்டம்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 1950

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் அனைவருக்கும் நிலையான எரிர்காலத்திற்கான முதல் படியாக இளைஞர்களுக்கான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. இது, யுனெஸ்கோ-வின் 2030-ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டிய 7 இடைப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியாவில் 50% அல்லது அதற்கு மேற்ப்பட்ட பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்ப உள்ளது.

1950-ல் எங்களது முதல் பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல், இன்று ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 20 கல்விநிலையங்களிலிருந்து, கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவ மாணவியர்கள் கற்று தேர்வடைந்துள்ளார்கள். இவற்றில் 7 பள்ளிகள் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தாலும், 9 பள்ளிகள், 1 பொறியியல் கல்லூரி, 1 பாலிடெக்னக் கல்லூரி, 1 தொழில் பயிற்சி மையம் மற்றும் 1 வேதபாடசாலை என 13 கல்விநிலையங்கள், பி.ஏ.சி. ராமசாமி ராஜா எஜுகேஷன் சாரிட்டீ டிரஸ்ட், சேதுராமம்மாள் சேரிட்டீஸ் மற்றும் ராஜா சேரிட்டீ டிரஸ்ட் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

 

எங்கள் கல்விநிலையங்களின் சிறப்பம்சங்கள்

  • தகுதிவாய்ந்த மற்றும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்
  • அதிநவீன வசதிகள் (கிராமபுறங்களில் நகர்ப்புற வசதிகள்)
  • தரமான கல்வி மூலம் கிராமப்புற குழந்தைகளை மேம்படுத்துதல் மற்றும் அவர்கள் உறுதியான தனிநபர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் விளங்க அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்தல்
  • அதிசிறந்த தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் பிரிவை இணைத்தல்.
  • நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போதித்தல்.
  • அறிவியல்சார் கல்வி மற்றும் அனுபவ கற்றல் முறை
  • நிர்வாகத்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளுர் சமுதாயத்தினர்கள் மற்றும் முன்னாள் மாணவ மாணவியர்கள் ஆகியோரை இணைத்து அவர்களின் கூட்டு ஈடுபாட்டைப் பயன்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்களை உருவாக்க அவர்களை வழிநடத்துதல்.

 

எதிர்கால திட்டவரைபடம்

  • கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் கல்வித்துறையில் ஒரு தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. புதிய இயல்புநிலைக்கு திரும்ப எங்கள் கல்விநிலையங்களை மறுவரையறை செய்து கொண்டிருக்கிறேhம்.
  • ஆற்றல்மிக்க எடுத்துக்காட்டு வழிமுறைகள் உருவாகும் மற்றும் ஆசிரியர்களின் பங்கு வழிகாட்டிகளை ஒத்திருக்கும்.
  • நாங்கள் ஆசிரியர்களை தொழில்நுட்பத்தை கையாளும்படி செய்கிறோம்.
  • ஆன்லைன் வகுப்பு என்பது பழைய அதே கற்பித்தல் முறையை புதிய பேக்கஜிங்கில் போர்த்தி வழங்குவதுபோல் மட்டுமல்ல ; ஆசிரியர்கள் புதிய அனுகுமுறைகளைக் கொண்டு வருவார்கள்
  • லாக்டவுன் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மேலும் திட்டங்கள்…

Ātmaprasāra

ஆத்மப்ராஸரா

ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி

Pandalgudi Restoration

பந்தல்குடி மறுசீரமைப்பு

சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,