20 கல்வி நிறுவனங்கள்
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
புகைப்படத் தொகுப்பு
திட்டம்
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் அனைவருக்கும் நிலையான எரிர்காலத்திற்கான முதல் படியாக இளைஞர்களுக்கான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. இது, யுனெஸ்கோ-வின் 2030-ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டிய 7 இடைப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியாவில் 50% அல்லது அதற்கு மேற்ப்பட்ட பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்ப உள்ளது.
1950-ல் எங்களது முதல் பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல், இன்று ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 20 கல்விநிலையங்களிலிருந்து, கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவ மாணவியர்கள் கற்று தேர்வடைந்துள்ளார்கள். இவற்றில் 7 பள்ளிகள் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தாலும், 9 பள்ளிகள், 1 பொறியியல் கல்லூரி, 1 பாலிடெக்னக் கல்லூரி, 1 தொழில் பயிற்சி மையம் மற்றும் 1 வேதபாடசாலை என 13 கல்விநிலையங்கள், பி.ஏ.சி. ராமசாமி ராஜா எஜுகேஷன் சாரிட்டீ டிரஸ்ட், சேதுராமம்மாள் சேரிட்டீஸ் மற்றும் ராஜா சேரிட்டீ டிரஸ்ட் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
எங்கள் கல்விநிலையங்களின் சிறப்பம்சங்கள்
- தகுதிவாய்ந்த மற்றும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்
- அதிநவீன வசதிகள் (கிராமபுறங்களில் நகர்ப்புற வசதிகள்)
- தரமான கல்வி மூலம் கிராமப்புற குழந்தைகளை மேம்படுத்துதல் மற்றும் அவர்கள் உறுதியான தனிநபர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் விளங்க அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்தல்
- அதிசிறந்த தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் பிரிவை இணைத்தல்.
- நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போதித்தல்.
- அறிவியல்சார் கல்வி மற்றும் அனுபவ கற்றல் முறை
- நிர்வாகத்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளுர் சமுதாயத்தினர்கள் மற்றும் முன்னாள் மாணவ மாணவியர்கள் ஆகியோரை இணைத்து அவர்களின் கூட்டு ஈடுபாட்டைப் பயன்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்களை உருவாக்க அவர்களை வழிநடத்துதல்.
எதிர்கால திட்டவரைபடம்
- கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் கல்வித்துறையில் ஒரு தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. புதிய இயல்புநிலைக்கு திரும்ப எங்கள் கல்விநிலையங்களை மறுவரையறை செய்து கொண்டிருக்கிறேhம்.
- ஆற்றல்மிக்க எடுத்துக்காட்டு வழிமுறைகள் உருவாகும் மற்றும் ஆசிரியர்களின் பங்கு வழிகாட்டிகளை ஒத்திருக்கும்.
- நாங்கள் ஆசிரியர்களை தொழில்நுட்பத்தை கையாளும்படி செய்கிறோம்.
- ஆன்லைன் வகுப்பு என்பது பழைய அதே கற்பித்தல் முறையை புதிய பேக்கஜிங்கில் போர்த்தி வழங்குவதுபோல் மட்டுமல்ல ; ஆசிரியர்கள் புதிய அனுகுமுறைகளைக் கொண்டு வருவார்கள்
- லாக்டவுன் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
புகைப்படத் தொகுப்பு
மேலும் திட்டங்கள்…
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி
பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது.
டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளி
ராம்கோ குழும நிறுவனரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்கள் 1950-இல் டி.ஏ.கே.எம். ராமம்மாள் துவக்கப்பள்ளியை நிறுவினார். ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு உயர்தர முழுமையான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கல்வியும் புத்திசாலித்தனமும் எங்கள் நோக்கத்தின் கண்கள்" என்ற பொன்மொழியால் பள்ளி இயக்கப்படுகிறது.
பி.ஏ. சின்னையா ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளி
P.A. Chinniah Raja Memorial Higher Secondary School (PACM HSS) was established in Virudhunagar district in 1950 by visionary industrialist and founder of Ramco Group, Shri. P.A.C. Ramasamy Raja as a part of a larger education initiative.